- ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும்.
- வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.
சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம். இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும்.
ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது. நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.
எனவே சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க உப்பை வறுத்து பயன்படுத்த வேண்டும். குப்பைமேனி இலை அல்லது முருங்கை இலை சேர்த்து வறுத்த உப்பு மிகவும் நல்லது.
-செந்தில் குமார்