- கம்பனும் அவர்க்கு இணங்கி , இராமாவதாரம் என்கிற கம்பராமாயணம் பாடி முடித்தான்.
- சைவ சமயத்திற்கும் இதுபோன்ற ஒரு காவியம் படைக்க வேண்டும் என்றார்.
தொடக்ககாலத்தில் சமணர்களின் கை ஓங்கி இருந்தது. சோழர்களிடம் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். எனவே திருத்தக்கதேவர் என்கிற பெரும்புலவர் சமண சமயக் கருத்துகளை உள்ளடக்கிய சீவகசிந்தாமணி எனும் காப்பியத்தை இயற்றினார்.
ஆனால் அந்நூல் சமண சமயத்தைப் பெருக்குவதற்கு மாறாக மிதமிஞ்சிய காதற் சுவை கொண்டதாக அமைந்துவிட்டது. அதற்கு "தமிழ் காம சூத்திரம்"என்ற அங்கதம் பெயர் கூட உண்டு. இந்நூலின் காமச் சுவையில் கட்டுண்டு கிடந்தான் சோழன்.
இதனைக் கண்ட வைணவ சமயத்தினர் வைணவத்தின் அவதாரத் தலைவன் இராமனைப் புகழ்ந்து ஒரு காவியம் படைக்கும்படி கம்பனைப் பணித்தனர். இதற்குக் கொடைவள்ளல் சடையப்பரை நாடினர். சடையப்பரும் இராமகாதைபாடும்படி கம்பனை வேண்டிக் கொண்டு அவனுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.
கம்பனும் அவர்க்கு இணங்கி , இராமாவதாரம் என்கிற கம்பராமாயணம் பாடி முடித்தான். இப்படித்தான் வைணவத்திற்கு ஒரு கம்பராமாயணம் எழுந்தது.
இதைக்கண்ட சைவப்பெருமக்கள் சோழனிடம் சென்று முறையிட்டனர். "மன்னா சமணத்திற்கு சீவகசிந்தாமணியும் வைணவத்திற்கு ஒரு கம்பராமாயணமும் தோன்றியுள்ளது. ஆனால் சைவ சமயத்திற்கு என்று காவியம் இல்லை, எனவே சைவ சமயப் பெருமை கூறும் காபியம் படைக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்" என்றனர்.
சோழனுக்கும் அது சரியெனப்பட்டது. தனது அமைச்சரும் பெரும்புலவருமான சேக்கிழார் பெருமானை அழைத்தார் . "சமணத்திற்கு சீவக சிந்தாமணியும் , வைணவத்திற்குக் கம்பராமாயணமும் பெருங்காப்பியங்களாக உள்ளன, சைவ சமயத்திற்கும் இதுபோன்ற ஒரு காவியம் படைக்க வேண்டும் என்றார்.
அதற்கு "சீவக சிந்தாமணிக்கு ஜீவகன் எனும் ஒரு காவியத்தலைவனும் கம்பனுக்கு இராமன் என்று ஒரு அவதார புருஷனாகிய இராமனும் காவியத்தலைவர்களாக இருந்தானர். எனவே அவர்கள் எளிதாக இவ்விருவரை மட்டும் காவியத்தலைவர்களாக வைத்துப் பாடிவிட்டனார். ஆனால் சைவத்தில் அப்படி இல்லை. பல காவியத்தலைவர்கள் உள்ளனர். அவர்களில் யாரை பற்றிப் பாடுவேன்" எனக் கேட்டார்.
அதற்கு சோழன் . "அத்துனை பேரையும் பற்றி ஒரு பெரியபுராணமே பாடுங்கள்" என்றார்.
எனவேதான் சேக்கிழார் 71 நாயன்மார்கள் (எல்லாரும் நினைப்பது போல் நாயன்மார்கள் அறுபத்துமூவர் (63)மட்டுமல்லர்) புகழ்பாடும் திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம்பாடி முடித்தார்.
ஒரு ஒரு கதைத்தலைவனைப் பற்றிப் பாடிய திருத்தக்கதேவரினும் , கம்பனை விடவும் பல காவியத் தலைவர்களைப் பற்றிப் பாடிய தெய்வத்திரு சேக்கிழாரே சிறந்த காவியப் புலவராவார்.
-துலாக்கோல்