- ஓய்வுக்குப் பிறகு, குழந்தைகள் திருமணத்துக்குப் பிறகு பொழுது போகாது தான்.
- கூட்டுக் குடும்பமாக இருக்கலாம், அதில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒப்புதல் இருந்தால்.
குழந்தைகள் வளரும் போதே பையனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுய வருமானம் அவசியம்னு சொல்லி வளர்த்துங்க.
18 வயசிலிருந்தே குழந்தைகளை சுயமா முடிவெடுக்க விடுங்க. தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாமே தவிர அவங்க வாழ்க்கையையும் நாமே வாழ ஆசைப்படக் கூடாது.
அவங்க வருமானத்தை எதிர்பார்க்காத அளவுக்கு முன்கூட்டியே நமக்கான சேமிப்பு, வருமானத்தை திட்டமிடுங்க.
கல்வி, திருமணத்துக்கென்று நம் இருப்பை சுத்தமாகக் காலி செய்து விட்டு அப்புறம் அவர்களை எதிர்பார்த்திருக்கும் நிலமையைத் தவிர்க்க வேண்டும்.
ஓய்வுக்குப் பிறகு, குழந்தைகள் திருமணத்துக்குப் பிறகு பொழுது போகாது தான். இதுநாள் வரை வேலை, குடும்ப நிர்வாகம்னு ஓடிட்டு இருந்ததுல நாம் இழந்த விசயங்களுக்கு இப்ப நேரம் ஒதுக்கலாம். இரண்டாவது தேனிலவு போகலாம். அதை விட்டுட்டு திருமணமான குழந்தைகளையே துரத்திக் கொண்டு இருக்கக் கூடாது.
திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் வச்சுடுங்க. தட்டுத்தடுமாறி எல்லாத்தையும் கத்துக்கட்டும். பிரச்சனைகள் வந்தால் சமாளிக்கட்டும். ஓரளவுக்கு ஒருத்தருக்கொருத்தர் புரிதல் வந்த பிறகு தேவைப்பட்டால் கூட்டுக் குடும்பமாக இருக்கலாம், அதில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒப்புதல் இருந்தால்.
பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன்னு பொண்ணோட அம்மாவும் தலையிட வேண்டியதில்லை, பையனோட அம்மாவும் தலையிட வேண்டியதில்லை.
குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம், சேமிப்பு எதுவாக இருந்தாலும் உதவி தேவைப்படும் போது மட்டும் பெத்தவங்க அளவோடு தலையிட்டால் போதும். அவங்களே கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக தினமும் ஃபோன் பண்ணி லைவ் அப்டேட்ஸ் நாமும் செய்யக் கூடாது. அவங்களையும் செய்ய வைக்கக் கூடாது.
இறக்கை முளைத்த குஞ்சுகளைப் பறக்க விட்டுவிட வேண்டும். அதன் உலகை அது ரசிக்கட்டும். அதன் உணவை அது தேடட்டும். அதன் கூட்டை அதுவே கட்டி சந்ததிகளை உருவாக்கட்டும்.
-தி.தமிழ்ச்செல்வி