கதம்பம்

பறக்க மறந்த பறவைகள்!

Published On 2025-02-24 23:32 IST   |   Update On 2025-02-24 23:32:00 IST
  • பறவைகள் அதிகப்படியான சக்தியை செலவு செய்றது பறக்கிறதுக்கு தான்.
  • பல தலைமுறைகள் கடக்கும் போது, இறகின் அமைப்பு பறக்கிற தன்மையை இழந்துட்டே வரும்.

பறவைகள்ன்னு சொல்றதால மட்டுமே அதெல்லாம் பறக்கும்ன்னு அர்த்தம் இல்ல. பறத்தலை கைவிட்ட சில வகையினங்களும் பறவைகள்ன்னு தான் இங்க வரையறுக்கப்படுது."

ஈமு, கேசவரி, நெருப்புக் கோழி மாதிரியான உயிரினங்கள் எல்லாம் பறவைகள்ன்னு தான் சொல்றாங்க. ஆனா அவை எதுவும் பறக்குறதில்லையே. எப்படி ?

அவையும் ஒரு கால கட்டம் வரைக்கும் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகளாகத் தான் இருந்திருக்கும். ஆனா, குறிப்பிட்ட கால கட்டத்தில் அதன் ஒரு பகுதி ஏதாவது தீவுல வந்திறங்கி இருக்கும்.

பறவைகள் அதிகப்படியான சக்தியை செலவு செய்றது பறக்கிறதுக்கு தான். அதனால தான் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறக்கிற பறவைகள் எல்லாம் காற்றோட ஓட்டத்தை பயன்படுத்தி பெருமளவு சக்தி விரயம் இல்லாம சக்தியை சேமிச்சுக்கற விதமா பயணிக்கின்றன. அதே போல குறிப்பிட்ட தீவில் இறங்கிய பறவை கூட்டத்துக்கு அங்க எதிரிகள் - அதாவது அவங்களை வேட்டையாடுற/உண்ணும் ஆட்கள் - இல்லாதபட்சம் படிப்படியாக பறப்பதை கைவிட்டு நடக்க ஆரம்பிக்கும்.

அவ்வாறு, பல தலைமுறைகள் கடக்கும் போது, இறகின் அமைப்பு பறக்கிற தன்மையை இழந்துட்டே வரும். கால்கள் நடப்பதற்கு ஏற்ற மாதிரி பரிணமிக்கும். பறக்காத பறவைகளோட இறக்கை மற்றும் இறகு அமைப்பு வச்சு அது எவ்வளவு காலம் முன்னாடியே பறத்தலை கைவிட்டிருக்கும்னு நாம புரிஞ்சுக்கலாம்.

-லிங்கம் தேவா

Tags:    

Similar News