கதம்பம்

வயிறுதான் ஆரம்ப இடம்

Published On 2023-08-28 17:32 IST   |   Update On 2023-08-28 17:32:00 IST
  • பசிக்கு உணவு கொடுங்கள்.. உணவை பசித்தப்பின்பே கொடுங்கள்.. உடல் ஒழுங்காகும்.. உங்கள் நோயும் குணமாகும்.
  • மீறப்பட்ட ஒழுங்கால் ஏற்பட்ட விளைவினை.. வேறொன்றால் ஒழுங்குப்படுத்த முயல்வதென்பது இயலாத காரியம்

உண்ணும்போது உங்களுக்கில்லாத அக்கறை.. உடல் பெருத்தப்பின்பு ஏற்படுவதில் நியாயமில்லை.

உணவுக்கும் பசிக்குமான இணக்கத்தை சீர்குலைத்தவர்கள்.. உணவு சரியில்லையென்றோ.. உடல் சரியில்லையென்றோ.. குறைச்சாற்றுவது எந்த விதத்தில் நியாயம்.

மீறப்பட்ட ஒழுங்கால் ஏற்பட்ட விளைவினை.. வேறொன்றால் ஒழுங்குப்படுத்த முயல்வதென்பது இயலாத காரியம்.

நீங்கள் எந்தவித நோயாளியானாலும்.. அந்த நோய் ஆரம்பித்த இடம் உங்கள் வயிற்றிலிருந்துதான்.. அங்கிருந்துதான் அந்நோய்க்கான சிகிச்சையும்.. தொடங்கப்பட வேண்டும்..

பசிக்கு உணவு கொடுங்கள்.. உணவை பசித்தப்பின்பே கொடுங்கள்.. உடல் ஒழுங்காகும்.. உங்கள் நோயும் குணமாகும்..

தேவைக்குகொடுக்கப்படாமல் போனால் அழிவாகும்.. தேவைக்குமேல் கொடுக்கப்பட்டதெல்லாம் கழிவாகும்..

கழிவுத்தேக்கமே காலம் கடந்த நோய்க்குக் காரணம்..

கழிவு கரையான் போன்றது.. அரிப்பது தெரியாது.. அழிந்தப்பின்பே தெரியவரும்.

-அன்பு வேல் முருகன்

Tags:    

Similar News