இந்தியா
ஜெய்ப்பூரில் துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்து ரூ.5.66 லட்சம் கொள்ளை
- 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளை.
- போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாய்புராவில் ராஜஸ்தான் மருதாரா கிராமின் வங்கி அமைந்துள்ளது. இந்நிலையில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் வங்கிக்கு புகுந்து துப்பாக்கி முனையில் 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மர்ம நபர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், மற்றவர் முகத்தை மப்ளரால் மூடியிருந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.