ஆந்திராவில் புதிய வகை வைரஸ் தாக்கி 12 லட்சம் கோழிகள் சாவு
- கோழிப்பண்ணை நடத்தி வரும் விவசாயிகளுக்கு கடும் நிதி இழப்பு.
- பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 2 கோடிக்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி கேட் என்ற நியூ கேஸில் புதிய வகை வைரஸ் நோய் கோழிகளை தாக்கி வருகிறது.
இதன் காரணமாக உத்திரஜாவரம் மற்றும் பெரவலி மண்டலங்களில் கடந்த 2 நாட்களில் 12 லட்சம் கோழிகள் உயிரிழந்து உள்ளன. இதனால் கோழிப்பண்ணை நடத்தி வரும் விவசாயிகள் கடும் நிதி இழப்புக்கு ஆளாக்கி உள்ளனர்.
கோழிகளின் திடீர் இறப்புகளுக்கு பறவை காய்ச்சல் காரணமாக என கண்டறிவதற்காக இறந்த கோழிகளின் மாதிரிகளை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிலையத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
இன்னும் 2, 3 நாட்களில் கோழிகள் இறப்பிற்கான காரணம் குறித்த பரிசோதனை முடிவுகள் வெளிவரும் என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நிபுணர் குழுக்களை அமைத்து கோழி பண்ணைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தனுகு, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் கோழி பண்ணை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நோய் பரவலுக்கு காரணம் இறந்த கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் அங்குள்ள கால்வாய்கள் சாலை ஓரங்களில் பேசப்படுவதால் அதிக அளவில் நோய் தொற்று ஏற்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திராவில் தொடர்ந்து பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் இறப்பு அதிகரித்து வருவதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.