கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள்.. தப்பு கணக்கு போட்ட ஆம் ஆத்மி - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பாஜக
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பல எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
- ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தனர்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.
கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது,
குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் பல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், இந்த 8 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. 8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்த நிலையில் அந்த 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.