செய்திகள்
திருப்பதி ரெயில் நிலையத்தில் இலவச வை-பை வசதி: மத்திய மந்திரி நாளை தொடங்கி வைக்கிறார்
திருப்பதி ரெயில் நிலையத்தில் வை-பை வசதிக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி நாளை இலவச வை-பை தொடங்கப்படுகிறது.
நகரி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகிய ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விசாகப்பட்டினம், விஜயவாடா ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி தொடங்கப்பட்டது.

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு நாளை நெல்லூர் ரெயில் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திருப்பதி ரெயில் நிலையத்தில் இலவச வை-பை வசதியை தொடங்கி வைக்கிறார்.
இந்த வசதி மூலம் திருப்பதி வரும் பக்தர்கள் தங்கள் செல்போனில் இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.