செய்திகள்
இதயம், மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து 2 வயது குழந்தையின் புற்றுக்கட்டியை அகற்றிய டாக்டர்கள்
இதயம் மற்றும் மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து சுமார் 9 மணிநேர ஆபரேஷனின் மூலம் இரண்டு வயது குழந்தையின் இதயத்தில் இருந்த புற்றுக்கட்டியை கேரளாவை சேர்ந்த டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த மெரின் பபீர் என்ற பெண் துபாயில் ஐ.டி. துறையில் பணியாற்றியபடி கடந்த பத்தாண்டுகளாக தனது கணவருடன் அங்கேயே வசித்து வருகிறார். இந்த தம்பதியரின் ஆண் குழந்தையான இரண்டு வயதாகும் ஆதிக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது ஆதியின் இதயம் அமைந்துள்ள பகுதியின் வெளிப்புறத்திலும் இதயத்தின் உள்பகுதியிலும் புற்றுக்கட்டி உருவாகி, அதனால் ரத்த சுழற்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
பொதுவாக, கருத்தரிக்கும்போது பெண்களின் கருமுட்டையின் மேல்பகுதியில் இருக்கும் மெல்லிய திசு, கருத்தரித்த ஒருமாத காலத்துக்கு பின்னர் கரைந்து உடலில் இருந்து வெளியேறி விடும். ஆனால், ஆதி விவகாரத்தில் அந்த கருமுட்டையின் மேல் திசு, மெல்ல வளர்ச்சியடைந்து புற்றுக்கட்டியாக மாறி, குழந்தையின் இதயத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்தது.
இதுபற்றி அறிய வந்ததும் உடடியாக கணவர் மற்றும் ஆதியுடன் உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பிய மெரின், கொச்சியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தார். இதய நோயியல் நிபுணரான டாக்டர் மூசா குன்ஹி தலைமையிலான டாக்டர்கள் குழு ஆபரேஷன் மூலம் ஆதியின் இதயத்தில் ஏற்பட்டிருந்த புற்றுக்கட்டி அடைப்பை நீக்க தீர்மானித்தது.
இதையடுத்து, கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற மிகவும் சிக்கலான ஆபரேஷனில் 30 டாக்டர்களை கொண்ட குழுவினர் சுமார் 9 மணி நேரமாக போராடி குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
சாதாரணமாக, மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும். 22 டிகிரி செல்சியஷுக்கு கீழே வெப்பநிலை போனால் உடடியாக மரணம் நேர்ந்துவிடும்.
இந்நிலையில், இந்த ஆபரேஷனின்போது குழந்தை ஆதியின் உடல் வெப்பநிலையை செயற்கையாக 15 டிகிரியாக டாக்டர்கள் குறைத்தனர். அவனது இதயம் மற்றும் மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து, இயக்கங்களை நிறுத்தி சுமார் 9 மணிநேரம் நடைபெற்ற இந்த அரிய ஆபரேஷன் மூலம் அவனது இதயத்தில் இருந்த சுமார் 200 கிராம் எடையுள்ள புற்றுக்கட்டிய டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
உலகிலேயே இந்த முறையில் நடைபெற்ற ஐந்தாவது அறுவை சிகிச்சை இது என்று குறிப்பிட்டுள்ள டாக்டர் மூசா குன்ஹி, ஆபரேஷனுக்கு பின்னர் ஆதி குணமடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.