செய்திகள்

பத்ராச்சலம் ராமர் கோவிலில் மாயமான நகைகள் கண்டுபிடிப்பு

Published On 2016-08-28 14:05 IST   |   Update On 2016-08-28 14:05:00 IST
பத்ராச்சலம் ராமர் கோவிலில் மாயமான நகைகள் வழக்கத்துக்கு மாறாக வேறொரு லாக்கரில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
நகரி:

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பத்ராச்சலத்தில் புகழ்ப்பெற்ற ராமர் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உற்சவர் சீதாதேவிக்கு அணிவிக்கும் தாலி செயின், லட்சுமணருக்கு அணிவிக்கும் செயின் போன்ற நகைகள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ் போலீசில் புகார் செய்தார். அங்குள்ள நகைகள் 11 அர்ச்சகர்களின் கண்காணிப்பிலேயே இருந்தன.

இதையடுத்து போலீசார் 11 அர்ச்சகர்களிடமும் தீவிர விசாரணை மேற் கொண்டனர். பின்னர் கோவில் முழுக்க சோதனையில் ஈடுபட்டனர். கோவில் நகைகள் இருந்த லாக்கர்களை திறந்தும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது மாயமான நகைகள் வழக்கத்துக்கு மாறாக வேறொரு லாக்கரில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மாயமானதாக கூறப்பட்ட நகைகள் அனைத்தும் அதில் பத்திரமாக இருந்தன.

Similar News