செய்திகள்

தாஜ் மஹாலை பார்வையிட்ட மியான்மர் அதிபர்

Published On 2016-08-28 17:17 IST   |   Update On 2016-08-28 17:17:00 IST
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள மியான்மர் அதிபர் தாஜ் மஹாலை இன்று பார்வையிட்டுள்ளார்.
லக்னோ:

மியான்மரில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமொக் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்நாட்டு அதிபராக டின் கியாவ் அக்கட்சியால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மியான்மர் அதிபராக டின் கியாவ் பொறுப்பேற்றதற்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவர், ஆக்ராவில் அமைந்துள்ள, 17-ம் நுற்றாண்டில் கட்டப்பட்ட முகலாயர்களின் நினைவுச்சின்னமான தாஜ் மஹாலை இன்று பார்வையிட்டார். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தாஜ் மஹாலை பார்வையிட இரண்டு மணிநேரம் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியை நாளை சந்திக்கவுள்ள அவர், இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Similar News