செய்திகள்

போலீசில் சரண் அடைந்தவர்களை தாக்க திட்டமிட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக்கொலை

Published On 2016-09-06 19:14 IST   |   Update On 2016-09-06 19:14:00 IST
திருந்தி வாழ்ந்தவர்களை தாக்க திட்டமிட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்படும் மாவோயிஸ்டுகளில் பலர் சரண் அடைந்து அரசாங்கத்தின் மறுவாழ்வு திட்டத்தின்கீழ் உதவி பெற்று திருந்தி வாழத் தொடங்கி உள்ளனர். இதனால் அவர்கள் மீது மாவோயிஸ்ட் இயக்கத்தினர் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சரண் அடைந்தவர்கள் மற்றும் ரகசிய உளவாளிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மாவோயிஸ்ட் இயக்கத்தினர் திட்டமிடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், கோயபெகுர் கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட நபர், ஜனதா சர்க்கார் அமைப்பின் தலைவனாக செயல்பட்ட மேதா பெஞ்சமி என்ற குக்கல் மதா என்பது தெரியவந்துள்ளது.

Similar News