செய்திகள்

கேரளாவில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேர் கைது

Published On 2016-10-03 06:00 IST   |   Update On 2016-10-03 06:00:00 IST
கேரளாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் கன்னூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் தென் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த சதி திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு போலீசாருக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு போலீசாருடன், கேரள போலீஸ், டெல்லி மற்றும் தெலுங்கானா போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் மற்றும் சோதனை பணியில் கன்னூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் பேர் கன்னூர் மாவட்டம் கனகமலா பகுதியை சேர்ந்தவர்கள், ஒருவர் மட்டும் கோழிக்கோடு மாவட்டத்தின் குட்டியாடி பகுதியை சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சோதனையின் போது சில பொருட்கள் கைப்பற்றன. தேசிய புலனாய்வு போலீசார் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News