செய்திகள்

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட்டுகள் உயிர்தப்பினர்

Published On 2016-10-03 17:30 IST   |   Update On 2016-10-03 17:30:00 IST
ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் தாக்குதல் ரக ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானதில் பைலட்டுகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானத்தில் பைலட்டுகள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. ஆனால், விமானம் தரையை நோக்கி வேகமாக வந்தபோது, பைலட்டுகள் இருவரும் வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய ஜாகுவார் விமானம், அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News