செய்திகள்
சீரடி சாய்பாபா கோவிலில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுப்பு
மராட்டிய மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று முதல் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை ஏற்க இயலாது என்று சீரடி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சீரடி:
மராட்டிய மாநிலம் சீரடியில் உலக புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. தினமும் இத்தலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்ததும் இத்தலத்துக்கு வந்த பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். என்றாலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை முதலில் சீரடி ஆலய நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
ஆனால் நேற்று முதல் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை ஏற்க இயலாது என்று சீரடி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உண்டியல்களிலும் பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்த வேண்டாம் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சீரடி கோவிலில் பணத்தை அன்பளிப்பாக செலுத்த விரும்புபவர்கள் கார்டுகளை பயன்படுத்தி பணம் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் கவுண்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.
சீரடி ஆலயத்தில் கடந்த ஒரு வாரத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சேர்ந்துவிட்டன. அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த ஏற்பாடு நடந்து வருகிறது.