செய்திகள்

டெல்லி ஏ.டி.எம். வாசல்களில் காத்திருக்கும் மக்களிடம் குறைகேட்ட ராகுல்

Published On 2016-11-21 11:22 IST   |   Update On 2016-11-21 11:22:00 IST
மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து டெல்லி ஏ.டி.எம்.களில் இன்று காலையில் இருந்து வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களை சந்தித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
புதுடெல்லி:

புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் டெல்லியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மற்றும் மராட்டிய மாநிலத்தின் வகோலா பகுதியில் உள்ள ஏ.டி.எம். ஆகியவற்றில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வரிசையில் காத்திருந்து பணம் பெற்றார்.

இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ராகுல் காந்தி, வழியில் ஜஹாங்கிர்புரி, ஆனந்த் பர்பாட், ஸகிரா மற்றும் இந்தர்லோக் ஆகிய பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் அதிகாலையில் இருந்து வரிசையில் காத்திருக்கும் தாய்மார்கள் மற்றும் முதியவர்களை சந்தித்து பணநெருக்கடியால் அவர்கள் படும் அவதி பற்றி கேட்டறிந்தார்.

Similar News