செய்திகள்

விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கலாம் - மத்திய அரசு சலுகை

Published On 2016-11-21 14:54 IST   |   Update On 2016-11-21 14:54:00 IST
விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இதனையடுத்து இந்த அறிவிப்பின் நடைமுறை சிக்கல்களால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விதைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. விவசாயிகள் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து விதைகளை வாங்கலாம்.

தேசிய, மாநில விதை கழகங்கள் மற்றும் மத்திய, மாநில அரசின் மையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை விவசாயிகள் மாற்றிக் கொள்ளலாம்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Similar News