செய்திகள்

முல்லை பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம்: தமிழக அரசு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது

Published On 2017-04-04 09:57 IST   |   Update On 2017-04-04 09:57:00 IST
கேரள மாநிலத்தில் முல்லை பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
புதுடெல்லி:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்காக முல்லை பெரியாறு அணையின் அருகில் நீர் பிடிப்பான பகுதியில் தமிழகத்துக்கு சொந்தமான நிலத்தில் மெகா வாகன நிறுத்துமிடம் ஒன்றை கேரள அரசின் வனத்துறையினர் கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் முன்னிலையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஜி.உமாபதி, தமிழக அரசின் வாதங்களில் முன்வைக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள் குறித்து உரிய ஆவணங்கள் தாக்கல் செய்ய சற்று அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Similar News