செய்திகள்
செம்மரக்கடத்தலில் மாதம் ரூ.2½ கோடி சம்பாதித்த விமான பணிப்பெண்
செம்மரக்கடத்தலில் கைதான விமான பணிப்பெண்ணின் கணவரை சித்தூர் போலீசார், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கடப்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்தூர்:
திருப்பதியை அடுத்த கல்யாணி நீர்த்தேக்கம் அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்தி வருகின்றனர்.
அவர்களை பிடிக்க ஆந்திர மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செம்மரக்கடத்தல் தொடர்பாக 2015-ம் ஆண்டு பர்மாவை சேர்ந்த சர்வதேச கடத்தல் மன்னன் மார்கொண்டா லட்சுமணா (வயது 28) என்பவரை சித்தூர் போலீசார் கைது செய்தனர். அவர், குண்டர் சட்டத்தின் கீழ் மதனப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைதான மார்கொண்டா லட்சுமணனின் காதலி சங்கீதா ஷட்டர்ஜி (26) என்பவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். அவரை, மார்கொண்டா லட்சுமணா 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது சங்கீதா ஷட்டர்ஜி செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு கைதாகி சித்தூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மார்கொண்டா லட்சுமணாவை கோர்ட்டு அனுமதியோடு நேற்று போலீஸ் காவலில் எடுத்து சித்தூர் போலீசார் விசாரித்தனர்.
மார்கொண்டா லட்சுமணா சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கைதாகி ஒரு ஆண்டாக மதனப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்தபடியே அதிகாரிகளின் உதவியோடு அவர் தனது செல்போன் மூலமாக பேசி செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அவரின் மனைவி சங்கீதா ஷட்டர்ஜியோடு அடிக்கடி செல்போனில் பேசி செம்மரக்கடத்தலில் ஈடுபட வைத்துள்ளார்.
போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அவர், தனது மனைவிக்கு பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். செம்மரம் கடத்தல் மூலம் சங்கீதா ஷட்டர்ஜி மாதத்துக்கு ரூ.2 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். மார்கொண்டா லட்சுமணாவுக்கு யார் யாரிடம் தொடர்பு உள்ளது, அவரின் செல்போனில் இருந்து யார், யாருக்குப் பேசப்பட்டு உள்ளது என்பது குறித்து சித்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மார்கொண்டா லட்சுமணா சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடப்பா மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

காதலனும், செம்மர கடத்தல் மன்னனுமான லட்சுமணனுடன் சங்கீதா ஷட்டர்ஜி.