செய்திகள்

தாவூத் இப்ராகிமை நாடு கடத்தி வர யாரும் கோரவில்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மத்திய அரசு தகவல்

Published On 2017-05-15 03:51 IST   |   Update On 2017-05-15 03:51:00 IST
இந்தியாவில் உள்ள எந்தவொரு விசாரணை அமைப்பும் தாவூத் இப்ராகிமை நாடு கடத்தி வர யாரும் கோரவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் கராச்சி நகரில் வசித்து வருவதாக நம்பப்படுகிறது.

இதே போன்று 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத்தும் பாகிஸ்தானில் உள்ளார்.

இவ்விருவரையும் நாடு கடத்திக்கொண்டு வர முறையீடு எதுவும் பெறப்பட்டுள்ளதா என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஒரு செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “இந்தியாவில் உள்ள எந்த வொரு விசாரணை அமைப்பும், தாவூத் இப்ராகிமையோ, ஹபீஸ் சயீத்தையோ இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வருமாறு எங்களிடம் விண்ணப்பிக்கவில்லை” என கூறி உள்ளது. 

Similar News