செய்திகள்
மேகாலயாவில் பன்றிக்கறி சாப்பிட்ட 8 பேர் பலி - 100 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
மேகாலயாவில் பன்றிக்கறி சாப்பிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 100 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஷில்லாங்:
மேகாலயா மாநிலம் ரீபோய் மாவட்டத்தில் உள்ள நோங்கியா என்ற இடத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பன்றிக்கறி விருந்து வழங்கப்பட்டது.
விருந்தில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று பன்றிக்கறி சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி- மயக்கம் ஏற்பட்டதுடன் கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது. அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் 7 வயது சிறுவன் உள்பட 8 பேர் உயிர் இழந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஷில்லாங் மற்றும் நாங்போ ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர் தீவிர சிகிச்சைக்கு பின்பு அவர்கள் உடல் நலம் தேறியது. ஆனாலும், 55 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பன்றிக்கறி விஷமாக மாறி அதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இருந்தாலும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என கருதி உணவு பொருளை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.