செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 காசுகளும், டீசல் ரூ.0.89 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

Published On 2017-05-31 22:53 IST   |   Update On 2017-05-31 22:53:00 IST
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகிறது. அதன்படி இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.01-க்கும், டீசல் ரூ.58.61-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.70.24-க்கும், டீசல் ரூ.59.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசியாக கடந்த மே 16-ல் பெட்ரோல் விலையில் ரூ.2.16 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.10 காசுகளும் குறைக்கப்பட்டிருந்தது. 

Similar News