செய்திகள்
தெலுங்கானா பள்ளிக்கூடங்களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாய பாடம்: சந்திரசேகர்ராவ் உத்தரவு
தெலுங்கானா மாநில பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக்கி முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஐதராபாத்:

தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் தலைமையில் நேற்று முன்தினம் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், “மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகளில் தெலுங்கு மொழி கட்டாயமாக இடம் பெற வேண்டும்” என்கிற 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக்க முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் அறிவுறுத்தி உள்ளார்.
தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக்காத கல்வி நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும், ‘உருது’ மொழியை தேர்வு செய்யும் கல்வி நிறுவனங்கள், அதனை விருப்ப பாடமாக கற்றுக்கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
தெலுங்கு மொழி பாடத்திற்கான பாடத்திட்டங்களை சாகித்ய அகாடமி தயார் செய்ய வேண்டுமென முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் கேட்டுக்கொண்டு உள்ளார்.
பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, விரைவில் புத்தகங்கள் அச்சடிக்கப்படும் என தெரிவித்து உள்ள சந்திரசேகர்ராவ், கண்டிப்பாக இந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் கற்று தர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
மாறாக கல்வி நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை தயார் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகளில் கட்டாயம் தெலுங்கு மொழி இடம் பெறவேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரி சந்திரசேகர்ராவின் இந்த அதிரடி உத்தரவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரவேற்று உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் “ தெலுங்கானா பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாய பாடமாக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். மற்ற மாநிலங்களும் இதனை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு தங்களுடைய தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ” என தெரிவித்து உள்ளார்.
மேலும், தனது சொந்த மாநிலமான ஆந்திராவும் இந்த திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.