செய்திகள்

ஒரே நாளில் இரு இடங்களில் படகு கவிழ்ந்து விபத்து - உ.பி. மற்றும் பீகாரில் 28 பேர் பலி

Published On 2017-09-14 10:44 IST   |   Update On 2017-09-14 10:44:00 IST
ஒரே நாளில் உ.பி. மற்றும் பீகாரில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆற்றில் மூழ்கி 28 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று 60 பேரை ஏற்றிச் சென்ற படகு யமுனை ஆற்றில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்கப்பட்ட 12 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன மீதி பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதே போன்று பீகாரிலும் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பீகாரில் மராஞ்சி பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் ஏற்பட்ட இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே நாளில் இரு இடங்களில் ஏற்பட்ட படகு விபத்தில் 28 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News