செய்திகள்
விபத்து மரண இழப்பீட்டில் புதிய விதிமுறைகள்: சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயம்
சாலை விபத்துகளில் ஒருவர் உயிரிழக்கிறபோது அவரைச் சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க பின்பற்றுவதற்கான புதிய விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு வகுத்து நேற்று வழங்கி உள்ளது.
புதுடெல்லி:
சாலை விபத்துகளில் மரணம் ஏற்படுகிறபோது, அதற்கான இழப்பீடுகளை வழங்குவது தொடர்பாக 27 பேரது வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில், சாலை விபத்துகளில் ஒருவர் உயிரிழக்கிறபோது அவரைச் சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க பின்பற்றுவதற்கான புதிய விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு வகுத்து நேற்று வழங்கி உள்ளது.
இந்த விதிமுறைகளில், இறந்த நபர் சுய தொழில் செய்து வந்தாரா, தனியார் நிறுவனத்தில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெற்று பணியில் இருந்தாரா, அமைப்பு ரீதியில் இல்லாத துறையில் இருந்தாரா என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு, எதிர்கால எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு சில சதவீதம் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இறந்தவரின் வயதுக்கு ஏற்ப எத்தனை சதவீதம் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மாறுபடுகிறது.
இது தவிர்த்து இறுதிச்சடங்குக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தலைப்புகளின்கீழ் வழங்க வேண்டிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.