செய்திகள்

டெல்லி: மெட்ரோ ரெயில்முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை

Published On 2017-11-01 15:25 IST   |   Update On 2017-11-01 15:25:00 IST
டெல்லியில் மெட்ரோ ரெயிலின் முன்னர் பாய்ந்து போலீஸ் அதிகாரி இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள மேற்கு உத்தம்நகர் மெட்ரோ ரெயில் நிலைய நடைமேடையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் ஏராளமான மக்கள் ரெயிலின் வருகைக்காக காத்திருந்தனர். நிலையத்துக்குள் ரெயில் நுழைந்தபோது அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் திடீரென்று ரெயிலின் முன்னர் பாய்ந்தார்.

அவர்மீது ரெயில் மோதிய வேகத்தில் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பலியானவரின் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார், அவரது பாக்கெட்டில் இருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தின் மூலம் இறந்த நபரின் பெயர் ஹன்ஸ் ராம் பர்லா என்றும் டெல்லி காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர் என்றும் தெரிவித்தனர்.

உடல்நலக்குறைவால் இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுத்ததாக தெரியவந்துள்ளது.

Similar News