செய்திகள்

ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2018-02-06 14:30 IST   |   Update On 2018-02-06 14:30:00 IST
ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் ஹிட்டாச் சிட்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. #HyderabadMetro
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், பயன்பாட்டில் இருக்கும் ஹிட்டாச்சி நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ரெயில் நிலையத்தின் உள்ளே தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோ ஊடகங்களில் வெளியிடப்பட்டன. தீயை அணைக்கும் பணியில் மூன்று வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெயில் நிலையத்தின் உள்ளே வெல்டிங் பணிகள் நடந்து வந்ததாகவும், அதில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உரிய பாதுகாப்பு எச்சரிக்கைகளுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மெட்ரோ நிறுவனம் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

Similar News