செய்திகள்
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, இரட்டை வழிபாதை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. #Budget2018
புதுடெல்லி:
2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந் தேதி பராளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். ரெயில்வே துறைக்கு தனி பட்ஜெட் இல்லாத நிலையில், இந்த ஆண்டு ரெயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ரெயில்வே திட்டங்கள் மற்றும் புதிய ரெயில்வே திட்டங்களை ரெயில்வே துறை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநில ரெயில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7,685 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை மொத்தம் 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒசூர் – பெங்களூரு இடையிலான 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கான 376 கோடி ரூபாயும் அடக்கமாகும்.
மேலும், தமிழகத்தில் 20 ஆயிரத்து 64 கோடி ரூபாய் மதிப்பிலான 27 ரெயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் 3,198 கிலோ மீட்டர் தூர புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியும் அடங்கும் என்றும் ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.