செய்திகள்

பாட்னா மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2018-05-20 05:15 IST   |   Update On 2018-05-20 05:15:00 IST
லாலு பிரசாத் யாதவுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில உபாதைகள் ஏற்பட்டதால் அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பாசோதனை செய்யப்பட்டது. #LaluPrasadYadav
பாட்னா:

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ காரணங்களுக்காக 6 வார ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்படும் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வார் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து சிறுநீரக பிரச்சினைகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக பெங்களூரு செல்ல இருக்கிறார்.

இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று காலையில் திடீரென மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில உபாதைகள் ஏற்பட்டன. எனவே அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்துவிதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து மாலையில் வீடு திரும்பினார்.  #LaluPrasadYadav 
Tags:    

Similar News