செய்திகள்

உ.பி.யில் லாரி - டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி

Published On 2018-06-05 06:03 IST   |   Update On 2018-06-05 06:03:00 IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோயில் லாரியும், டிரக்கும் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #trucktractorcollision

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் லாரியும், டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். #trucktractorcollision #tamilnews
Tags:    

Similar News