செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பூங்காவில் குண்டு வெடிப்பு - 5 பேர் காயம்

Published On 2018-06-17 21:14 IST   |   Update On 2018-06-17 21:14:00 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் கூடியிருந்த பூங்காவில் திடீரென குண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். #JammuKashmir #Blast
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கண்டர்பால் மாவட்டத்தின் மன்சாபாய் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் இன்று பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

அப்போது, திடீரென அங்கு குண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #Blast
Tags:    

Similar News