செய்திகள்

பாகிஸ்தான் சிறைகளில் 471 இந்தியர்கள் - இந்திய தூதரகத்திடம் பட்டியல் வழங்கப்பட்டது

Published On 2018-07-01 22:07 GMT   |   Update On 2018-07-01 22:15 GMT
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் 471 பேரின் பட்டியலை அந்த நாட்டு அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் நேற்று வழங்கியது. #Pakistan #IndianPrisoner
இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் பற்றிய விவரங்களையும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதியும், ஜூலை 1-ந் தேதியும் பகிர்ந்து கொள்வது என இரு நாடுகளும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.

அதன்படி, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் 471 பேரின் பட்டியலை அந்த நாட்டு அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் நேற்று வழங்கியது. இந்த 471 பேரில் 418 பேர் மீனவர்கள் ஆவார்கள். பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக சென்றதாக கூறி இவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.  #Pakistan #IndianPrisoner  #Tamilnews
Tags:    

Similar News