செய்திகள்

அமர்நாத் யாத்திரை - பக்தர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு

Published On 2018-07-08 13:44 IST   |   Update On 2018-07-08 13:44:00 IST
அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #amarnathyatra
ஸ்ரீநகர் :

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த லக்‌ஷ்மி பாய்(52) எனும் பெண் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வதற்காக பால்தால் அடிவார முகாமில் காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அமர்நாத் யாத்திரையின் போது இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
Tags:    

Similar News