செய்திகள்

தென்கொரியா அதிபர் மனைவியுடன் டெல்லி வந்தார்

Published On 2018-07-08 19:13 IST   |   Update On 2018-07-08 19:13:00 IST
அரசுமுறை பயணமாக இன்று மாலை டெல்லி வந்தடைந்த தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவியை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். #MoonJaeininDelhi
புதுடெல்லி:

தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் வரும் 11-ம் தேதிவரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் மூன் ஜே-இன்-னுக்கு வரும் 10-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரபேற்பு அளிக்கப்படுகிறது. அன்று மாலை விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தும் தென்கொரியா அதிபர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது.


இந்நிலையில், இன்று மாலை டெல்லி வந்தடைந்த தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவினரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். #MoonJaeininDelhi
Tags:    

Similar News