செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் போபர்ஸ் வழக்கு - அப்பீல் மனு மீது நாளை விசாரணை

Published On 2018-10-11 01:23 IST   |   Update On 2018-10-11 01:23:00 IST
போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி:

போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், ரூ.64 கோடி லஞ்சம் கைமாறியது தொடர்பாக, இத்தாலி தொழில் அதிபர் குவாத்ரோச்சி, இந்துஜா சகோதரர்கள், வின்சத்தா, எஸ்.கே.பட்நாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, கடந்த 2005-ம் ஆண்டு மே 31-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து, சி.பி.ஐ. சார்பில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், பா.ஜனதாவை சேர்ந்த வக்கீல் அஜய் அகர்வால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நிலுவையில் உள்ளது.

இந்த மனுக்கள் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகின்றன. நீதிபதிகள் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுக்களை விசாரிக்கிறது. #boforscase
Tags:    

Similar News