செய்திகள்

செல்போனில் பேசினாரா? - லாலுபிரசாத் அறையில் போலீசார் சோதனை

Published On 2019-04-04 01:35 IST   |   Update On 2019-04-04 01:35:00 IST
லாலு தன்னுடைய கட்சியினருடன் செல்போனில் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக லாலுவின் வார்டில் சிறை அதிகாரிகளும், ராஞ்சி மாவட்ட போலீசாரும் கூட்டாக சோதனை நடத்தினர். #NitishKumar #LaluPrasad
ராஞ்சி:

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலுபிரசாத் யாதவ், 4 கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். அவர் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா ஜெயிலில் அடைக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக, அங்குள்ள ஆஸ்பத்திரியின் கட்டண வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடி, லாலு தன்னுடைய கட்சியினருடன் செல்போனில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. பீகார் முதல்- மந்திரி நிதிஷ் குமாரும் இக்குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதையடுத்து, லாலுவின் வார்டில் சிறை அதிகாரிகளும், ராஞ்சி மாவட்ட போலீசாரும் கூட்டாக சோதனை நடத்தினர். அதில், ஆட்சேபகரமான எந்த பொருளும் கிடைக்கவில்லை என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் குமார் பாண்டே தெரிவித்தார். #NitishKumar #LaluPrasad

Similar News