செய்திகள்

சிந்த்வாரா மக்களவை தொகுதியில் கமல் நாத்தின் மகனை நிறுத்தியது காங்கிரஸ்

Published On 2019-04-04 16:19 IST   |   Update On 2019-04-04 16:19:00 IST
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல் நாட் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #KamalNath #Chhindwara
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறது. அவ்வகையில் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 12 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதில் முதல்வர் கமல் நாத்தின் மகன் நகுல் நாத், சிந்த்வாரா மக்களவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கந்த்வா தொகுதியில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அருண் யாதவ், ஜபல்பூரில் விவேக் தங்கா போட்டியிடுகின்றனர்.



இதுதவிர சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முதல்வர் கமல் நாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கமல் நாத், கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராகவோ, மேல்-சபை உறுப்பினராகவோ இல்லாததால், 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபையில் உறுப்பினர் ஆகவேண்டும். அவர், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் சக்சேனா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #KamalNath #Chhindwara

Similar News