செய்திகள்
காங்கிரசுக்கு புதிய தலைவர் யார் ? - 7 பேர் பெயர்கள் பரிசீலனை
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டதையடுத்து, தலைவர் பதவிக்கு தற்போது 7 பேரின் பெயர் அடிபடுவதால் அவர்களில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவர் சமாதானம் அடைந்து மீண்டும் பதவியை தொடருவார் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர். இதற்காக மூத்த தலைவர்கள் தொடர்ந்து அவரை வற்புறுத்தி வந்தார்கள்.
ஆனால் நேற்று ராகுல் காந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். அதில் உறுதியாக இருக்கிறேன். எனவே கட்சி வேறு தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் காங்கிரசில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.
புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் காரிய கமிட்டிக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே காரிய கமிட்டி கூடி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி கட்சியின் தலைவர் ராஜினாமா செய்து விட்டாலோ அல்லது தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டாலோ கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் கட்சி தலைவராக இருந்து பணிகளை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் கட்சியின் மூத்த பொதுச்செயலாளராக உள்ள மோதிலால் வோராவை இடைக்கால தலைவராக நியமித்து கட்சியை வழிநடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்பிறகு காரிய கமிட்டி கூடி புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளது. ராகுல்காந்தியே புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதையும் ராகுல்காந்தி நிராகரித்து விட்டார்.
காரிய கமிட்டி தன்னிச்சையாக தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். எனவே கட்சியின் முக்கிய நபரை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்.
தலைவர் பதவிக்கு தற்போது 7 பேர் பெயர் அடிபடுகிறது. கட்சியின் தலித் தலைவர்களான சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே, பிற்படுத்தப்பட்டோர் தலைவரான முகுல் வாஸ்னிக், உயர்ஜாதியை சேர்ந்த அசோக் கெலாட், ஆனந்த் சர்மா மற்றும் இளம் தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பிரியங்காவை தலைவராக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திரா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக மாட்டோம் என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே பிரியங்கா தலைவராகும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
ராகுல்காந்தி இன்று மகாராஷ்டிர மாநில வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக செல்கிறார். அதன்பிறகு லண்டன் செல்ல உள்ளார். அவருடைய தலையீடு இல்லாமலேயே புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே புதிதாக ஒரு தலைவரை தேர்வு செய்தாலும் கட்சியை வழிநடத்த கம்யூனிஸ்டு கட்சிகளில் பொலிட்பீரோ என்ற அமைப்பு இருப்பது போல காங்கிரசிலும் ஒரு உயர்நிலை அமைப்பை உருவாக்கலாம் என்ற யோசனையும் உள்ளது.
அந்த அமைப்பில் மாநில மூத்த தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், இந்திராகாந்தி குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இருக்க வேண்டும் என்று திட்டமும் வகுத்து இருக்கிறார்கள்.
கட்சி தலைவருக்கு கீழ் பல செயல்தலைவர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. அவர்களுக்கு ஒவ்வொரு பகுதியாக பிரித்து கொடுக்கப்படும். அங்கு கட்சியை வளர்க்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரைவில் இதற்கான முடிவுகளை எடுக்க உள்ளனர்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இறுதி கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.

இதற்கு ராகுல்காந்தி எந்த பதிலும் தெரிவிக்காமல் இதுவரை மவுனம் காத்து வந்தார். எனவே தலைவர் பதவியில் அவர் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.