செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம்

Published On 2020-04-21 12:45 IST   |   Update On 2020-04-21 12:45:00 IST
பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால் திருப்பதி மாடவீதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும்கரடி, சிறுத்தை, மான், ஓநாய் மற்றும் காட்டுபன்றி போன்ற விலங்குகள் ஒய்யாரமாக வலம் வருகின்றன.
திருமலை:

கொரோனா தாக்கத்தால் கடைபிக்கப்படும் ஊரடங்கு உத்தரவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்படுவது கடந்த மாதம் 21-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் 30 நாட்களாக திருப்பதி முழுவதும் வெறிச்சோடி கிடக்கிகிறது.

கோவில் முன்புறம், மாடவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் அமைதியாக காணப்படுகிறது. இதனால் கோவில் முன்புறம் மற்றும் மாடவீதிகளில் வன விலங்குகள் கரடி, சிறுத்தை, மான், ஓநாய் மற்றும் காட்டுபன்றி போன்ற விலங்குகள் ஒய்யாரமாக வலம் வருகின்றன. காட்டு பன்றிகள் கோவில் வளாகத்தில் புகுவதை தடுக்க கோவில் மகாதுவாரம் முன்பு இரும்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் கோவில் வளாகம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று இரவு திருமலை புறவழிச்சாலையில் ஒரு சிறுத்தை நடமாடி கொண்டிருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், வனப்பகுதியையொட்டி உள்ளதாலும் சிறுத்தை அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்கிறது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. திருப்பதியில் பக்தர்கள் இல்லாமல் இருந்தாலும் பாலாஜி நகரில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Similar News