செய்திகள்
டெல்லியில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா?: நாளை முக்கிய ஆலோசனை- மணிஷ் சிசோடியா
டெல்லியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதா? என்பது குறித்து முடிவு செய்ய நாளை முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறோம் என மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்று காலை 8 மணி தகவல்படி 2,56,611 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85,975 எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. 31,667 பேருடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி 27,654 உடன் 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று கூறப்பட்டாலும் அரசு சார்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் மற்ற நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கை குறித்து முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக டெல்லி மாநில துணை மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மணிஷ் சிசோடியா கூறுகையில் ‘‘நாளை டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. இதில் நானும் கலந்து கொள்கிறேன். இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் சமூக பரவலாக கொரோனா தொற்று மாறிவிட்டதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
இதில் கலந்து கொள்ளும் வல்லுநுர்கள் டெல்லியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று சொன்னால், எங்களுடைய திட்டம் மாற்றப்படும்.’’ என்றார்.