செய்திகள்
சம்பளம் இன்றி பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா ஒப்புதல்
ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிட்ட ஊழியர்களை சுமார் இரண்டு வருட காலத்திற்கு சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்புவது உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் விமான சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. மே 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது. அதுவும் சுமார் 50 சதவீதம்தான் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால் பணியாளர்கள் தரம்பிரித்து அவர்களில் சிலரை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்பு முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அறிக்கை தயாரிக்க பொது மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கட்டாய விடுப்பு கொடுக்க ஏர் இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் சில பணியாளர்கள் 6 மாதம் முதல் இரண்டு வருடம் வரை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். இது ஐந்து வருடம் வரைக்கூட நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருந்தக்கூடிய தன்மை, செயல்திறன், திறன், செயல்திறனின் தரம், பணியாளரின் ஆரோக்கியம், உடல்நலக்குறைவால் உடனடியாக வேலைக்கு வர இயலாதவர்கள் என்ற அடிப்படையில் பணியாளர்களை தரம் பிரித்துள்ளது.