செய்திகள்
ராஜஸ்தான் கூட்டுறவு கடன் ஊழல்: மத்திய மந்திரியிடம் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு
ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டுறவு கடன் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின்போது விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று அசோக் கெலாட் முதல்வர் ஆனார்.
முதல்வர் ஆனதுடன் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்தார். அப்போது ஏராளமான விவசாயிகள் நாங்கள் கடனே வாங்கவில்லை. ஆனால் தள்ளுபடி செய்ததாக நோட்டீஸ் வந்துள்ளது என்று குற்றம்சாட்டினர்.
அப்போது இந்தக்கடன் எல்லாம் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும்போது வழங்கப்பட்டது. அவர்கள் ஆட்சியில் இதுபோன்று ஊழல் நடைபெற்றுள்ளது. இதனால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கெலாட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்திடம் இதுகுறித்து விசாரணை நடத்த ஜெய்ப்பூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே ஆட்சி கவிழ்ப்பு ஆடியோ டேப் விவகாரத்தில் இவர் பெயர் எஃப்.ஐ.ஆர்-ல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.