செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,628 பேருக்கு கொரோனா: 40 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,38,630 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தகவல்படி 40 பேர் உயிரிழக்க பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,255 ஆக உயர்ந்துள்ளது. 40 பேரில் 16 பேர் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தனர் என்றும், 7 பேர் கடந்த வாரங்களில் பலியானதாகவும், மீதமுள்ள 17 பேர் பல்வேறு இடங்களில் உயிரிழந்த நிலையில் தற்போது அறிக்கை வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மருத்துவமனையில் இருந்து 3,513 பேர் டிஸ்சார்ஜ் ஆக, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,52,187 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 33,936 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் குணமடைந்தவர்களின் சதவீதம் 95.76 ஆக உள்ளது. பலியானோர் சதவீதம் 2.51 ஆக உள்ளது.