செய்திகள்
ஆழ்துளை கிணறு

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி பலி

Published On 2021-08-08 13:43 IST   |   Update On 2021-08-08 13:43:00 IST
மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை கிராம மக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
உஜ்ஜைன்:

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் நடந்துள்ளது. இது போன்ற சம்பவம் மீண்டும் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் ஜோங்கேதி கிராமத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டு உள்ளது. அப்பகுதியில் 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறுமி ஆழ்துளை கிணற்றின் 12 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. கிராம மக்கள் விரைந்து செயல்பட்டு மண்ணை தோண்டி சிறுமியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

உடனே அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆழ்துளை கிணறு தோண்டிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News