செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் 20 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்றின் புதிய பாதிப்பு

Published On 2021-09-22 19:43 IST   |   Update On 2021-09-22 19:43:00 IST
கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பதிப்பு 15 ஆயிரத்திலேயே இருந்த நிலையில், இன்று 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கேரளாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு சீராக இருப்பதில்லை. ஒரு நாள் 15 ஆயிரமாக இருந்தால், மறுநாள் 17 ஆயிரமாக அதிகரிக்கும். அதன்பின் 15 ஆயிரமாக குறையும். இப்படியே இருந்து வருகிறது.

நேற்றைய பாதிப்பு  15,768 ஆக இருந்த நிலையில் இன்று 19,675 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,907 பேருக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

142 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19,702 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,61,026 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 24,039 ஆக அதிகரித்துள்ளது.

Similar News