இந்தியா
பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 23 ரெயில்கள் தாமதம்
- டெல்லியில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
- பனிமூட்டம் காரணமாக 23 ரெயில்கள் தாமதமாகின.
புதுடெல்லி:
வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. தலைநகர் டெல்லியில் காலை வேளையில் கடுமையான குளிர் காணப்படுகிறது.
இதற்கிடையே, கடுமையான பனி மற்றும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது வானிலை ஆய்வு மையம்.
தலைநகர் டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும், குளிர் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 23 ரெயில்கள் மற்றும் விமானங்களின் வருகை, புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.