இந்தியா
ஆந்திராவில் பெண்ணுக்கு தொழிலாளி பிணத்தை பார்சல் அனுப்பிய 3 பேர் கைது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் அடுத்த யண்ட கண்டியை சேர்ந்தவர் துளசி. இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் மரப்பெட்டி ஒன்று வந்தது.
துளசி மரப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஆண் பிணம் இருந்தது.
மேலும் மரப்பட்டியில் ரூ.1.30 கோடி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் துளசியின் சகோதரி ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா ஆகியோர் பர்லையா என்ற கூலி தொழிலாளியை கொலை செய்து பிணத்தை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.