காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் கைது
- தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குரும்ஹீரா கிரா மத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை அந்த பகுதிக்கு சென்று தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடியான தாக்குதலால் தீவிரவாதிகள் நிலை குலைந்தனர். இதனால் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பகுதியில் மேலும் தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சண்டை நடந்த பகுதியில் இருந்து பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினார்கள்.