அந்த இடத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினார் ரன்யா ராவ்- பாஜக MLA சர்ச்சை பேச்சு
- ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவ் குறித்து பாஜக எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் கொச்சையாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரன்யா ராவ் குறித்து பேசிய பசங்கவுடா பாட்டீல், "தங்க கடத்தலில் சுங்க அதிகாரிகளின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தாள். அவள் உடலில் துளைகள் இருந்த இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினாள். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயரையும் வெளியிடுவேன்
தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன்அவள் தங்கத்தை எந்த துளையில் மறைத்து கொண்டு வந்தாள் என்பது உட்பட அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.